தமிழகமே பரபரப்பு… இன்று கூடுகிறது சட்டமன்ற சிறப்பு கூட்டம்!

மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரவையில் நடந்த கூட்டத்தில் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், 142 நாட்களுக்குப்பின் கடந்த 1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார்.

தமிழக மாணவர்கள் நலன் காக்கும் நீட் மசோதாவை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பியதால் ஆளுநர் மீது கடும் விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அடுத்தடுத்து ஆளுநர் மாளிகை முன்பாக போராட்டங்கள் நடைபெற்று வருவதோடு, ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. இதனிடையே நீட் தேர்வு தொடர்பான சட்டமசோதா திருப்பி அனுப்பப்பட்டதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க கடந்த 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் ஒருமுறை நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்புக் கூட்டம் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது, இதற்கு முன்னதாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து சட்டமன்ற கூட்டங்களும் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டன. திமுக அரசு காகிதமில்லா பட்ஜெட்டை முன்னெடுத்தது போலவே, இந்த முறையும் டிஜிட்டல் முறையிலேயே சட்டமுன்வடிவை தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை கூட்ட அரங்கில் அனைத்து உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பு கணினி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இ்ன்று நடைபெறும் கூட்ட நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…