அன்று ‘தீட்டு’, இன்று ‘நீட்’ பெயரைசொல்லி ஒதுக்குறாங்க… கொந்தளித்த ஜவாஹிருல்லா!

jawahirullah

நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அன்று திட்டு என சொல்லி ஒதுக்கிவைத்தவர்கள், இன்று நீட் பெயரைச் சொல்லி மாணவர்களை ஒதுக்கிவைப்பதாக ஜவாஹிருல்லா காரசாரமாக பேசியுள்ளார்.

ஜவாஹிருல்லா பேசியதாவது: அன்று தீட்டு என்று சொல்லி ஒதுக்கிவைத்தார்கள். இன்று நீட் தேர்வை சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடிய நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆளுநருக்கு அனுப்ப கூடிய தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நான் வழிமொழிகிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு தேவையில்லை என்ற மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது மிகவும் மன வேதனை அளிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டவர் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதை முன்பே அறிந்து தான் அறிஞர் அண்ணா, ஆட்டுக்கு தாடி தேவையில்லை, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை எனக்கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…