போக்குவரத்து நெரிசலால் தான் 3% விவாகரத்து ஏற்படுகிறது – அம்ருதா ஃபட்னாவிஸ்

மும்பையில் நடக்கும் விவாகரத்துகளில் 3 சதவீதம் போக்குவரத்து நெரிசல் காரணமாக தான் நடைபெறுகிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அம்ருதா ஃபட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது, ஒரு சாதாரண குடிமகனாக இதைச் சொல்கிறேன். ஒருமுறை வெளியே சென்றால், சாலைகளில் இருக்கும் பள்ளங்கள் மற்றும்  போக்குவரத்து நெரிசல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாய் உள்ளது .மேலும் இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக தான் , மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு நேரம் கொடுக்க முடியாமல் போகிறது. இதன் காரணமாக  தான் மும்பையில் 3% விவாகரத்துகள் நடக்கின்றன.” என்று தெரிவித்தார்.

அவரது இந்த கூற்றை விமர்சித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், இந்த அறிக்கை “வியக்கத்தக்கது” என்று கூறினார். மேலும் “போக்குவரத்து நெரிசல்  விவாகரத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற அவரது குற்றச்சாட்டு வியக்க வைக்கிறது. விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் இதை நான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்.” என்று கூறினார்.

அம்ருதாவின் பெயரைக் குறிப்பிடாமல், சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார், “3% மும்பைவாசிகள் சாலை போக்குவரத்து காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறும் பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த (IL) லாஜிக் விருது வழங்கப்படுகிறது. பெங்களூரு குடும்பங்கள் தயவு செய்து இதைப் படிப்பதைத் தவிர்க்கவும், அது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…