வேட்பாளர்கள் கவனத்திற்கு… மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கவுள்ளது.

இதற்கான மனு தாக்கல், ஜனவரி 26ம் தேதி தொடங்கிய நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைந்தது. இதுவரை 10,153 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது மனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் சில தலைப்புகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் சில தகவல்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய 20 பேருக்கும், மைதானங்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களில் ஆயிரம் பேர் வரையிலோ அல்லது அரங்கில் கொள்ளளவுக்கு ஏற்றார்போல் 50 சதவீதம் பேருக்கும் குறைவான நபர்களையோ கொண்டு அலப்பறை கூட்டங்களை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…