அனைத்து கட்சி கூட்டம்… நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பு!

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க வருமாறு, பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீட் மசோதாவை திரும்ப அரசுக்கே திருப்பி வைத்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ம், இந்தக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…