“உங்க வார்த்தைய எங்க வாயில போடாதீங்க”.. செய்தியாளர்களிடம் சீறிய வானதி சீனிவாசன்!

vanathi

அரியலூர் மாணவியின் மரணம் தொடர்பாக பாஜக டெல்லி தலைமை நடிகை விஜயசாந்தி, சித்ராராய் வாகு, சந்தியா ராய், கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, அரியலூர் மாணவி கட்டாய மதமாற்றத்தால்தான் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இக்குழுவினர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்: மாணவி தற்கொலை தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது முதல் ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி. மாணவி மரணம் தொடர்பாக நால்வர் குழு தனது விசாரணை அறிக்கையை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் வழங்குவர். மாணவியின் அருகில் உள்ள வீட்டாரிடமும் , உறவினர்களிடமும் மரணம் குறித்து கேட்டறிந்துள்ளோம்.

அரியலூரில் உள்ள சிறிய கிராமத்தில் ஒரு ஏழை மாணவி பாதிக்கப்பட்டால் கூட பாஜக நீதி கேட்கும் என்பதை நிரூபிக்கவே இந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அப்போது கொந்தளித்த வானதி சீனிவாசன், தமிழ்நாடு அரசு தான் அனைத்தையும் மூடி மறைக்கிறது. அங்க போய் கேளுங்க இந்த கேள்வியை எல்லாம் என கோபமாக பதிலளித்தார். நாங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும், உங்கள் வார்த்தையை எங்க வாயில போடாதீங்க என்றும் ஆவேசமாக பேசினார்.

மாணவியை அவரது சித்தி கொடுமைப்படுத்தியாக கூறுவது தவறான தகவல். இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சி இது. தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்களே இருக்கின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக முதல்வர் அனைத்து தரப்பிலும் விசாரிக்க வேண்டும். படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள். இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. திமுக அரசு, தமிழக கலாசாரத்தை மாற்ற முயல்கிறது. முதலமைச்சர் ஏன் இந்த விசயத்தில் மவுனமாக இருக்கிறார்? இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…