மத்திய பட்ஜெட்டில் இது ஒன்று மட்டுமே ஆறுதல்… முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியது எதை தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். கோதாவரி-பெண்ணாறு -காவிரி நதிநீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும், செயல் படுத்த முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கூட நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை என்பது கவலையளிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் பட்ஜெட்டை ‘மக்களை மறந்த பட்ஜெட்’ என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய நிதி அமைச்சரின் நிதிநிலை அறிக்கை தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானது. வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது. தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் இல்லை. மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடருக்கு கோரிய நிவாரண நிதியும் ஒதுக்கவில்லை” எனது விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…