#Breaking திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நகர்ப்புற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் மொத்தம் உள்ள649 அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 22ம் தேதி முடிவுகள் அறிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிகளுடன் களமிறங்க உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து, பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தவிர பாமக, அமமுக, தேமுதிக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன.

இன்று காலை முதல் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், திமுக தற்போது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய மாநகராட்சிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், கோவில்பட்டி, திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும், எட்டையபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், விக்கிரவாண்டி, வளவனுர், திருவிடைமருதூர், பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கழுகுமலை,விளாத்திக்குளம், கடம்பூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் யார் யார் என்பதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…