BREAKING அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

Annamalai

பாஜக தலைமையின் உத்தரவு மற்றும் தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் மொத்தம் உள்ள649 அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 22ம் தேதி முடிவுகள் அறிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிகளுடன் களமிறங்க உள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவுடன் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தவிர பாமக, அமமுக, தேமுதிக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட இல்லை என பாஜகவின் துணை மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனையடுத்து கடுங்கோபத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து அண்ணாமலை சரண்டர் ஆனதாகவும், நயினார் பேச்சுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி ‘சாரி’ கேட்டதும் அனைவரும் அறிந்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. பாஜக 20 சதவீத இடங்களை கேட்ட நிலையில், அதிமுக 8 அல்லது 10 சதவீத இடத்திற்கு மட்டுமே சம்மதம் சொல்லியிருந்தது. கொடுத்த தொகுதிகளில் முதலில் வெற்றி பெறுங்கள் என்றும், நீங்கள் தோல்வி அடைந்தால் அது அதிமுகவினரின் வெற்றியை தட்டிப்பறிந்ததற்கு சமம் என்றும் ஓபிஎஸ்- இபிஎஸ் கறார் காட்டியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தம்ழிஅக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சி, தொண்டர்களின் குரலை செவி சாய்க்கும் விதமாக தனித்து போட்டியிட பாஜக முடிவெடுத்துள்ளது. எங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கடமை உள்ளது. தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலி பாஜக தனித்து போட்டியிட்டாலும், தேசிய அளவிலான கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…