நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது

மீண்டும் மேகமெடுத்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், இந்தாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  தொடங்கவுள்ளது. குடியரசுத் தலைவர் உரையை  தொடர்ந்து, நாளை  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மாலை என இரு வேலைகளிலும் நடைபெறவுள்ளது . பின் வரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பிப் – 2ந்  தேதி முதல் மாநிலங்களவை காலை 9 மணிக்கு தொடங்கி 2 மணி வரையும், மக்களவை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

  பிப்-2ம் தேதி முதல் 11ம் தேதி வரை பட்ஜெட் கூட்டுத்தொடரின் முதல் அமர்வு நடைபெறவுள்ளது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டாம் அமர்வுக்கான நேரக்கட்டுப்பாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் போன்ற விஷியங்களை குறித்து தான் அதிக கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…