வேட்புமனுவை தாக்கல் செய்த பஞ்சாப் முதல்வர்!

இந்தியாவில் உத்தரப் பிரதேசம்,உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பதாவுர் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளதாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் சார்பில் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பஞ்சாப் மாநிலத்தில் வெளியிடப்பட்டது. அதில் 8 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றது. அந்த அறிவிப்பில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரண்டு தொகுதிகளில் இருந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பதாவுர் தொகுதியில் இருந்து அவர் போட்டியிட உள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வரும் சம்கவுர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் அந்தத் தொகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

அதேபோல, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் இருவரும் பஞ்சாப் மாநிலத்திற்கான முதல்வர் வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தியை கேட்டுக் கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…