வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பிரியங்கா காந்தி..!

இந்த ஆண்டு உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்தி அங்குள்ள குடிசை பகுதிகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் குழுவாக இருக்கும் பெண்களிடம் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

நொய்டாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், அங்குள்ள பொதுமக்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுடனும் உரையாடினார். அவரது தேர்தல் பரப்புரையின் போது பாஜக எம்எல்ஏ பங்கஜ் சிங்கை தாக்கிப் பேசினார். உத்திரப்பிரதேச மக்களுக்காக அவர் ஒன்றுமே செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

உத்திரப்பிரதேச தேர்தல் வருகிற பிப்ரவரி 10 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…