‘விருந்துக்கா வந்திருக்கேன்’… ஜோதிமணியை வெளியே போகச் சொன்னது யார்?

Jyothimani

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது தன்னை வெளியே செல்லுமாறு கூறியதாக திமுகவினர் மீது காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றச்சாட்டியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு இடையே இருந்த வந்த நட்பு, நாளாடைவில் போட்டியாக மாறி வந்தது. தற்போது அது தெருச்சண்டையாக மாறி சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது இரு கட்சியினரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலின் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக செயல்பட்டனர். தேர்தல் பிரச்சாரங்கள், வாக்கு சேகரிப்பு என இருவரும் பிறருக்காக கடுமையாக உழைத்தனர். ஆனால் பதவிக்கு வந்த பிறகு தான் பிரச்சனைகள் மெல்ல விஸ்வரூபம் எடுத்து வந்தது. கரூரில் பெரிய ஆள் நீயா?, நானா? என போட்டியில் இருவரும் முட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கரூர் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டணிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, தி.மு.க கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னச்சாமி ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அத்தோடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் தனது ஆதரவாளர்கள் 9 பேருக்கு சீட் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்கவே, ஜோதிமணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உடன்பிறப்புகள் ஜோதிமணியை வெளியே போகச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி ‘நான் என்ன உங்க வீட்டுக்கு விருந்தா வந்திருக்கேன்’ ‘எனக்கும் ஒருமையில் திருப்பி பேசத் தெரியும்’ என சகட்டுமேனிக்கு சத்தம் போட்ட படியே வெளியே வந்தார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…