டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ஆர்.ன் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். மேலும் நாகலாந்து மாநிலத்திற்கு ஆளுனராக இருந்துள்ளார். தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில் அது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது . கவர்னர் ஒப்புதல் அளித்த பின் அதை மத்திய அரசுக்கு அவர் அனுப்பி வைக்க வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை பார்த்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி விட்டு வந்தார்.அதே வேளையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக குறித்து ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை டெல்லி செல்கிறார் ஆர்.என் ரவி . தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சனி, ஞாயிறு டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் திங்கட்கிழமை சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.