ஆரவாரமின்றி நடந்த தேர்தல்

தமிழ்நாட்டில் விட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
மொத்தம் 27,792 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பரிசீலனையில் 1,246 வேட்புப்பானுக்கள் நிராகரிக்கப்பட்டன. 15,287 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர்.3,346 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1577 ஊராட்சி தலைவர்கள், 12,252 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதற்காக 7,921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
நடைபெற்ற அந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிவித்த 11 வகையான ஆவணங்களை காட்டி மக்கள் வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 7.72% மக்கள் வாக்களித்திருந்தனர். பின் மதியம் 3 மணி நிலவரப்படி 50% வாக்களித்திருந்தனர். ஒரு சில பகுதிகளில் சில வாக்கு வாதங்கள் நடைபெற்றாலும் , அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் முடிவடைந்தது. மேலும்,நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாவட்ட ரீதியாக வாக்குப்பதிவுகள்
காஞ்சிபுரம் -80
செங்கல்பட்டு – 67
வேலூர் – 67
திருப்பத்தூர் – 78
ராணிப்பேட்டை – 81
விழுப்புரம் – 81.36
கள்ளக்குறிச்சி – 72
திருநெல்வேலி – 69
தென்காசி – 74
மீதமுள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 9ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளையும் வரும் 12-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.