கவிழ்கிறது காங்கிரஸ்!!!

இந்தியா முழுவதும் ஆலமர வேர்களை போல பரவி இருந்த காங்கிரஸ் கட்சி, சரியான தலைமை இல்லாததால் அழிவு பாதையை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கிறது.பஞ்சாப் மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அம்ரிந்தர் சிங் திடீரென்று எழுந்த உட்கட்சி பூசலால் பஞ்சாப் முதலமைச்சர் பதிவிலிருந்து விலகினார். அடுத்த வருடம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்படி கட்சிக்குள்ளே சண்டையிட்டு கொண்டால் மக்கள் எவ்வாறு இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வி தான் எழுகிறது. 

இதனை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர்  பூபேஷ் பாகேலுக்கும், அம் சுகாதாரத்துறை அமைச்சர் திருபுவனேஸ்வர் சரண் சிங் தியோவுக்கும் மோதல் போக்கு நடந்து வருகிறது. முதல்வர் பதிவிலிருந்து பூபேஷ் பாகேல் விலக வேண்டும் என்று சரண் சிங் போர்கோடியை தூக்கியுள்ளார். இதனால்  சட்டீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கு மேகாலயா மாநிலத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. மேகாலயா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் முகுல் சங்மா மற்றும் 13 எம்.எல்.ஏகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக முடிவு செய்துள்ளனர்.சில வாரங்களுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை முகுல் சங்மா சந்தித்து பேசியிருந்தார்.

இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கட்சிக்கு  சரியான தலைமை இல்லாததே என்று அரசியல் விமர்சர்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…