ஜெ. நினைவிடம் செல்கிறார் சசிகலா ; அதிமுக தலைமை அலுவலகம் செல்லவும் திட்டம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறை செல்வதற்கு முன்னதாக தனது தோழியின் நினைவிடத்திற்கு சென்று அங்கிருந்து நேராக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார் சசிகலா. அதற்கு பின்னர், அவரால் முதலமைச்சர் பொறுப்பில் அமரவைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணியுடன் இணைந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட நிலையில், சிறைத்தண்டனையை முழுமையாக கழித்துவிட்டு தமிழகம் திரும்பி, சட்டப்பேரவை தேர்தலின் போது அமைதி காத்த சசிகலா, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாக அதிமுக – அமமுக தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசி வந்த சசிகலா, தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிலிருந்த அதிமுக தேர்தலில் தோற்றதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் தரப்பினரின் சுயநல அரசியல்தான். அவர்களிடமிருந்து கட்சியை மீட்டாலொழிய அதிமுகவை காப்பாற்றமுடியாது என்பன போன்ற கருத்துக்களை தெரிவித்துவந்தார்.

இந்நிலையில், இன்னும் சில தினங்களில் சசிகலா, தனது தோழியும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை அரசியல் பேசாமல் அமைதி காத்து வந்த சசிகலா தற்போது ஊடகங்களை சந்தித்து தமது கருத்துக்களை வெளியிடத்தொடங்கிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…