மேகதாது அணை விவகாரம் ; டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்!

தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு புதிய அணை கட்ட தொடர்ந்து முயன்று வருகிற நிலையில், அதனை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் கூட்டப்பட்டு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் ஒத்துழைப்போம். மேகதாது அணை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை அனைத்து கட்சி குழு மத்திய அரசிடம் அளிக்க டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் டெல்லி செல்ல உள்ளார்.

டெல்லியில் மேகதாது தடுப்பணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…