நான்கு நாற்பதாக மாறும் ; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை!

தமிழக சட்டப்பேரவைக்கு தற்போது நாம் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பியுள்ளோம். இது எதிர்வரும் காலங்களில் நாற்பதாக, ஐம்பதாக மாறுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்துவந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோற்றவருமான அண்ணாமலை பாஜகவின் தமிழக தலைவராக அக்கட்சியின் தேசிய தலைவராக சில தினங்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று பாஜகவின் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அண்ணாமலை. அதனைத்தொடர்ந்து அவர் பாஜக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக சட்டப்பேரவைக்கு தற்போது நாம் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பியுள்ளோம்.
இது எதிர்வரும் காலங்களில் நாற்பதாக, ஐம்பதாக மாறுமென நம்பிக்கை உள்ளதாகவும், திமுகவிற்கு வாக்களித்த மக்களிடம் வாக்கு நாணயம் இல்லை. பிரிவினைவாதத்தை மட்டுமே திமுக பேசுவதாகவும், தமிழ்நாடும் பாஜகவும் எப்போதும் தேசியத்தின் பக்கமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக குறித்து மிக காட்டமான விமர்சனங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.