ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் – சீமான்!

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெற்றிவாகை சூட வாழ்த்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிமூன்று தம்பி, தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களது சீரிய முயற்சியாலும், அளப்பெரும் திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி விளையாட்டுத்துறையில் சாதனைகள் பல புரிந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தம்பி, தங்கைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்து, தமிழ் மண்ணுக்குப் பேரும், புகழும் சேர்க்க வேண்டுமெனும் எனது விருப்பத்தையும், வெற்றிவாகை சூடி வர எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Drupathi

“உலகமே இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது” – குடியரசுத் தலைவர் உரை!

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில்…

துரோகம் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது எடப்பாடி அணியை வச்சு செய்த பி.வி.கே.பிரபு

துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் துரோகம் என்பது அவர்களது மரபணுவிலே…

போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் அராஜகம்…!

சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது!சிவகாசி…

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை… தேவையும் இல்லை… சுப. வீரபாண்டியன் நறுக்

தமிழ்நாட்டில் மக்களை மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் திருவள்ளுவர் சிலை…