பழைய கதையை பேசி பயனேதுமில்லை – சசிகலாவுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரால் தான் அதிமுக சட்டப்பேரவையில் தோல்வியை தழுவியது. அடிப்படை தொண்டர்களின் உணர்வுகளையும், கட்சி நிர்வாகிகளின் உள்ளக்கிடக்கையையும் ஏற்றுக்கொள்ளாமல் இவர்கள் இருவரும் செயல்பட்ட காரணத்தினாலேயே, தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிமுக தோல்வியை தழுவியது. அதிமுகவை இவர்கள் இவரிடமிருந்து மீட்க வேண்டும் என தொடர்ச்சியாக அதிமுக – அமமுக தொடர்களிடம் தொலைபேசி வழியாக பேசிவருகிறார் சசிகலா.
அதேபோல், கட்சியை நன்றாக வழிநடத்துவார் என்ற அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் தாம் முதல்வர் பொறுப்பை வழங்கியதாகவும், அதற்கு நேர்மையாக பழனிசாமி செயல்படவில்லை எனவும் தொண்டர்களிடம் தெரிவித்துவருகிறார் சசிகலா.
இந்த நிலையில், அதிமுக குறித்த சசிகலாவின் மேற்கண்ட கருத்துக்கள் குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பழைய கதைகளை பேசி பயன் எதுவும் இருக்கப்போவதில்லை. சசிகலாவுக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை. கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் தேட சசிகலா முயலுகிறார். ஆனால், அவருக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.