பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் வழங்கப்படும்… அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

விரைவில் பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் தற்போது ஒரு அதிரடியான வாக்குறுதியை அறிவித்துள்ளது.
அதன்படி, பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்திற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 70 முதல் 80 சதவீதம் பேர் பூஜ்யம் ரூபாயை மின்சார கட்டணமாக பெறுவார்கள் என கூறப்படுகிறது.
தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அமரிந்தர் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.