புதுச்சேரியில் இன்று அமைச்சரவை பதவியேற்பு!

புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து 50 நாட்களுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.
என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியின் 15 வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் ஆட்சியமைந்தபின் நீண்ட இழுபறிக்கு இடையே 5 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.