விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அடையாளம் தெரியாத நபர் போன் செய்து இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் மோப்ப நாயுடன் விஜயகாந்த வீட்டிற்கு சென்று வீட்டை முழுவதுமாக சோதித்துள்ளனர்.
ஆனால், தொலைபேசியில் கூறியது போல எந்த ஒரு வெடிகுண்டும் அவரது இல்லத்தில் இல்லை எனத் தெரிய வந்தது.
பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. விருகம்பாக்கம் போலீஸ் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.