காயித்-இ-மில்லத்க்கு புகழ் வணக்கம் செலுத்திய ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசிய முஸ்லீம் லீகின் தலைவர் காயித்-இ- மில்லத் அவர்களுக்கு அவரது 125-வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தினார்.
முகமது இஸ்மாயில் என்ற பெயரைக் கொண்ட இவர் அனைவராலும் காயித்-இ- மில்லத் என்று அன்பாக அழைக்கப்படுகிறார். காயித்-இ- மில்லத் என்பதன் பொருள் “சங்கத் தலைவன்” ஆகும்.
இவர் அரசியலில் மாநில சுயாட்சி, மத நல்லிணக்கம் போன்ற பல உரிமைகளுக்காக போராடியுள்ளார்.
மேலும் இவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின், காயித்-இ- மில்லத் அவர்கள் பெரியார்,சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற தலைவர்களோடு மில்லத் அவர்கள் கொண்டிருந்த நட்பை நினைவு கூறினார். மேலும், 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அண்ணாதுரைக்கு மில்லத் உறுதுணையாக இருந்ததையும் நினைவு கூறினார்.
மில்லத் குறித்து மேலும் பேசிய மு க ஸ்டாலின், அவர் தமிழ் மீது கொண்டிருந்த பற்றையும், சிறுபான்மையினர் மீது கொண்டிருந்த அன்பையும் சுட்டிக்காட்டினார். மேலும், அவரின் கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.