முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும். அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி – விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…