அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்! எதிர்கட்சித் தலைவர் யார்?

தமிழகத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக பொறுப்பேற்றது. அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

ஆனால், எதிர்கட்சித்தலைவர் யார் என்ற குழப்பம் தற்போது அதிமுகவில் நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தலைவர் யார் என முடிவு செய்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், வெளியாக வில்லை.

இதனையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை முன்மொழிந்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…