பாஜக முக்கிய தலைவர் மேற்கு வங்கத்தில் கைது!

மேற்குவங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தற்போது நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகின.இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார்.
அவர் பதவி ஏற்கும் போது ஆளுநர் மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் பாஜக காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் மேற்குவங்கத்தில்
நடைபெறும் வன்முறையை கண்டித்தன.
இந்நிலையில் நேற்று மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பாஜக தமிழக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மேற்குவங்க காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது வானதி சீனிவாசனும் கைதுசெய்யப்பட்டார்.