இது எங்களுக்கு தோல்வியல்ல,மிகப்பெரிய வெற்றி…. அதிமுக எம்எல்ஏ அதிரடி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆளும் கட்சியாக இருந்து வந்த அதிமுக எதிர்க்கட்சி என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு பலரும் அதிமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். சிலர் அதிமுக – பாஜக கூட்டணியே அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று கூறுகின்றனர். கட்சி தலைமைகளுக்கு இடையேயான வேறுபாடு என சிலர் கூறிவருகின்றனர்.
காரணம் என்னவாக இருந்தாலும் தோல்வி தோல்வியே. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு இது அதிமுகவுக்கு தோல்வி அல்ல இது மிகப்பெரிய வெற்றியாகும் என கூறியுள்ளார்.
மேலும் எம்ஜிஆர் தனது படங்களில் இரண்டு அடிகளை வாங்கிக் கொண்டு திருப்பி அடிப்பார் அதுபோல அதிமுகவும் மீண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இயக்கமானது ஜெயலலிதா காட்டிய வழியில் கட்டுக்கோப்பாக உள்ளதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.