நாளை பதவியேற்க உள்ள நிலையில் மூத்த தலைவர்களைச் சந்தித்த ஸ்டாலின்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் நேற்று ஆளுநரைச் சந்திக்க உரிமை கோரினார்.
தொடர்ந்து, மாலையில் ஸ்டாலின் ஆட்சியமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். கொரோனா காலம் என்பதால் நாளை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இன்று பதவியேற்பதற்கு முன்பு மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவை சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த வாழ்த்து பெற்றார். பின்னர் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனை சந்தித்தும் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.