தோல்வி குறித்து ஈ.பி.எஸ் ஓ.பி.எஸ் கூட்டறிக்கை
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணி மே 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 126 இடங்களில் பெருவாரியாக வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்க உள்ளதால் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
அதிமுக எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாத நிலையில், எதிர்கட்சியாக தங்களது கடமையைச் சரியாக செய்ய வேண்டும் என ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், “சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்கட்சி என்னும் பொறுப்புடன் பணிகளை மேற்கொள்வோம். நிர்வாகம் என்னும் நாணயத்தின் ஒருபக்கம் ஆளும்கட்சி என்றால், மறுபக்கம் எதிர்கட்சி. ஆட்சி தேர் சரியாக செயல்படுவதை உறுதி செய்யும் கடமை நமக்கு உள்ளது” என தெரிவித்துள்ளனர்.