7-ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், திமுக கூட்டணி 167 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சில் வருகிற 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். அப்போதே அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதுமுகங்களும் இளைஞர்களும் இதில் பெரும்பாண்மையாக இருப்பார்கள் எனத் தெரிகிறது.