நம்பாதீங்க எல்லாம் பொய்! கருத்துக் கணிப்பை நம்ப மறுக்கும் அதிமுக

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று, மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது.
இதிலும், திமுக தான் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிமுக தரப்பினர் இந்த கருத்து கணிப்புகளை நம்ப மறுத்துள்ளனர்.
”கருத்து கணிப்புகள் எப்போதும் உண்மையாவதில்லை. இது கருத்துக் கணிப்பு இல்லை கருத்து திணிப்பு” என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
”நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். வெற்றி என்றும் அதிமுக பக்கம் தான்” என ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது, கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.