ஆக்ஸிஜன் உற்பத்தி முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் ! ஸ்டாலின் உறுதி

இந்தியாவில் நிலவிய ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய, சில நிபந்தனைகளுடன் உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தற்காலிகமானது தான். ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது. உற்பத்தி முடிந்ததும் ஆலை மூடப்பட்டு விடும்.
திமுக ஆட்சியமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார். `