பிரபல அரசியல் பிரமுகரின் மகன் கொரோனாவால் பலி… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ்  யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆஷிஷ் யெச்சூரி ஊடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவரது இந்த திடீர் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஷிஷ் யெச்சூரியின் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தேசிய செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மகனும் ஊடகவியலாளருமான ஆஷிஷ் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எமது அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தைப்பூச இலவச புடவைகள் வழங்கும் விழா கூட்ட நெருசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாப பலி

வாணியம்பாடியில் தைப்பூசம் முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற கூட்ட…

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…