இத்தன தொகுதி கூடவா பாஜகவுக்கு கிடைக்காது! பிரதமருக்கு தக்க பதிலடி கொடுத்த மம்தா….

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.முதல் நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் மேற்கு வங்கம் பல எதிர்பாராத நிகழ்வுகளை சந்தித்துள்ளது.
தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதலே மேற்கு வங்கத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.தேர்தல் இத்தனை கட்டங்களாக நடத்துவதற்கு காரணம் என்ன என மம்தா பானர்ஜி ஆரம்பம் முதலே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வந்தார்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு மையம் போர்க்களமாக காட்சியளித்தது.வாக்காளர்கள் மீது பாதுகாப்பு படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.இதில் 5 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து பாஜக திரிணாமுலையும்,திரிணாமுல் காங்கிரஸையும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி 135 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 100-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மம்தா பானர்ஜி பாஜக 70 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.இதன்மூலம் மேற்குவங்க தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.