படிக்காதவர்கள் கேவலமானவர்களா? அன்புமணிக்கு திருமா பதிலடி

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு பற்றி அன்புமணி ராமதாஸ், “இரட்டைக் கொலை வழக்கை திருமாவளவன் தான் சாதிக் கொலையாக மாற்றுகிறார். படித்தவர்கள் அவர் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அதிகாமானது. பலரும் தங்களது கல்வித் தகுதியை பதிந்து நான் திருமாவிற்கு ஆதரவளிக்கிறேன் என பதிவிட்டிருந்தனர்.

இதற்கு, திருமா நன்றி தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “படிக்காதவர்கள், படித்தவர்கள் என மக்களை பாகுபடுத்திப் பார்ப்பது சனாதானப் புத்தியின் வெளிப்பாடு. படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்விபெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல.

மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *