புதுச்சேரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் பரப்புரை

தமிழத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில், போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக இன்று ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, “ஆளுநருக்கு முதலில் இருந்தே மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் பாஜக ஆளுநரை மாற்றியுள்ளது. நியமன எல்.எல்.ஏக்களை வைத்தே புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்த்துள்ளது.
எனவே, இந்த முறை மக்கள் பாஜகவை புதுச்சேரிக்குள் வர முடியாத அளவுக்கு வாக்களிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.