திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா!

திமுக எம்.பி.யும். மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்த திமுக எம்.பி.யும், அக்கட்சியின் மகளிரணியின் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.