முடிஞ்சா திமுகவை தொட்டுப்பார் தம்பி ! அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

தேர்தல் பரப்புரையின் போது, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மணல் அள்ளுவது குறித்து பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு, தேர்தல் பரப்புரையின் போது, அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை “தூக்கிப்போடு மிதிச்சேனா பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துரும். உன்ன மாதிரி நான் எத்தன பேர பாத்து இருப்பேன். தேர்தல் ஆணையத்தைப் பார்த்து எல்லாம் பயப்பட மாட்டேன்” என கேட்பவர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கனிமொழி “ திமுகவை முடிஞ்சா தொட்டுப்பார் தம்பி. உன்னை மாதிரி பலரின் விமர்சனங்களை கடந்து தான் திமுக இன்று நின்று கொண்டிருக்கிறது” என பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *