நல்லா இருக்கீங்களா? என உரையை தொடங்கிய மோடி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்துள்ளார். அப்போது கூட்டத்தினரைப் பார்த்து நல்லா இருக்கீங்களா? மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி என தமிழில் பேசி தனது உரையைத் தொடர்ந்தார்.

மேலும் அவர், “ மதுரை தான் தமிழ் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது. உலகின் தொன்மையான தமிழ் மொழியை சங்கம் வைத்து வளர்த்த பெருமை மதுரையையே சாரும். இதே மதுரை மண் தான் காந்தியடிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மதுரை வீரன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை முறையான கட்டிமுடிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *