சென்னை சிங்கார சென்னையானது திமுக ஆட்சியில் தான் – ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர்களுக்காகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், “சென்னையை சிங்கார சென்னையாக நான் மேயராக இருந்த சமயத்தில் மாற்றி வைத்திருந்தேன்.
ஆனால், தற்போது இந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் சென்னையை சீரழிந்த சென்னையாக மாற்றியது தான் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியின் சாதனை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேவையான அளவு மேம்பாலங்கள் அமைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.