2-வது சுதந்திரத்திற்காக போராட வேண்டும் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்போது பேசிய அவர்,நாட்டின் 2-வது சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என பேசினார்.
நாடு கொள்ளைக்காரர்களின் கையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது அதன் இரண்டாவது சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும் என தனது கோவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள் கோவையை நாட்டின் தலைசிறந்த நகரமாக மாற்றிக் காட்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.