மதுரையில் அதிமுக செயலரிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி

தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்,இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக செயலரிடமிருந்து ரூ.26 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பறக்கும்படையினர் விசாரணை செய்த போது இந்த பணம் அதிமுக பகுதி செயலாளர் முருகேசனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் 26 லட்சத்தை திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளரை ஆதரித்து வில்லாபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இத்தகைய பெருந்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.