திருச்சி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.கொரோனா அதிகரித்து வருவதற்கு தேர்தல் பொதுக்கூட்டங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முதலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
இந்நிலையில்,இன்று திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.இவருடைய கணவர் தங்கமணிக்கு ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.