நடிகர் போல மக்களை சந்தித்து வருகிறார் ஸ்டாலின் – முதல்வர் விமர்சனம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்போது பேசிய அவர்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகரைப்போல மக்களை சந்தித்து வருவதாக விமர்சித்துள்ளார்.
மக்களோடு ஒருவனாய் இருப்பவன் நான் எனவும் தான் ஒரு நடிகரைப்போல மக்களை சந்தித்து வரவில்லை எனவும் தாக்கிப் பேசினார்.மேலும்,மு.க ஸ்டாலின் போல எந்தவொரு திட்டத்தையும் படித்து பார்க்காமல் அதிமுக செயல்படுத்தவில்லை எனவும் இந்த நவீன அறிவியல் உலகில் பொய் கூறி யாரும் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.