சர்ச்சை பேச்சு குறித்து ஆ. ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம்

அண்மையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆ. ராசா பேசிக் கொண்டிருக்கும் போது, முதல்வர் பழனிச்சாமியைக் குறித்து விமர்சித்திருந்தார். இதில், அவர் முதல்வரின் தாயாரைப் பற்றி விமர்சித்திருப்பதாக தெரிவித்த பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

முதல்வரும் தன் தாயாரைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக வருத்தம் தெரிவித்து பரப்புரை செய்திருந்தார். இதனையடுத்து, ஆ. ராசா அரசியல் சார்பாக தான் விமர்சனம் செய்தேன். எனது பேச்சு முதல்வருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்குமானால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

ஆனாலும், இந்த சர்ச்சை பேச்சு குறித்து தமிழக தேர்தல் ஆணையத் தலைவர் சத்யபிரதா சாகு தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து ஆ. ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

அதில், “திராவிட இயக்கத்தை சேர்ந்த நான் பெண்களை அவமதிப்பாக பேசுவது கிடையாது. உண்மையில் எனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. நான் பேசியதன் முழு வீடியோவைப் பார்த்தால் உண்மை தெரிந்து விடும்.

வேண்டுமென்றே அரசியல் காரணத்திற்காக எனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *