இடஒதுக்கீடு விவகாரத்தால் கூட்டணியில் குழப்பமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது, ஓபிஎஸ், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தற்காலிகமானது தான் என தெரிவித்திருந்தார்.
இதற்கு, பாமக தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அடுத்த சட்டம் வரும் வரை மாற்ற முடியாது என தெரிவித்திருந்தார். மேலும், முதல்வரை போனில் தொடர்பு கொண்டு கண்டணத்தைத் தெரிவித்ததாகவும், அவர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த தேர்தலில் இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து தான் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இப்போது, வந்த இந்த பிரச்சனையால் கூட்டணியில் பாதிப்பு வருமா என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு அமைச்சர் ஜெயகுமார், இந்த விவகாரத்தால் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.