அம்மாவை நினைத்து மேடையிலேயே கண்ணீர் விட்ட ராஜேந்திர பாலாஜி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த இரு தேர்தல்களிலும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அங்கு அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியதால் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ராஜேந்திர பாலாஜி பேசினார். 10 ஆண்டுகளாக ஜெயலலிதா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 5 ஆண்டுகள் அவரின் அமைச்சரவையில் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது ஜெயலலிதா அனைவரையும் வணங்கி விட்டுத்தான் செல்வார்.

ஆனால், அன்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, யாரின் செயலோ தெரியவில்லை. எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டுச் சென்றார். ஜெயலலிதாவின் வார்த்தைகள் வெல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *