2 தங்கக்கட்டி துண்டுகளுக்காக கேரள மக்களை ஏமாற்றி விட்டது கம்யூனிஸ்ட் அரசு – பிரதமர் மோடி!

2 தங்கக்கட்டி துண்டுகளுக்காக கம்யூனிஸ்ட் அரசு கேரள மக்களை ஏமாற்றி விட்டது என கேரளாவில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறும் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார். இன்று காலை கோவை விமான நிலையம் வந்த பிரதமர் அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கேரளாவின் பாலக்காட்டுக்கு சென்றார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’2 தங்கக்கட்டி துண்டுகளுக்காக கம்யூனிஸ்ட் அரசு கேரள மக்களை ஏமாற்றி விட்டது. யேசுநாதரை காட்டிக்கொடுத்த யூதாஸைப் போல கேரள மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. கேரள மக்கள் ஊழல் நிறைந்த கம்யூனிஸ்ட் அரசை கேரளாவிலிருந்து அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.